உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு அயோத்தி வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு அயோத்தி வந்தடைந்தது

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.,22) நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடவுள் ராமர் மீது பக்தி கொண்டவர்கள் பல்வேறு வகையான பொருட்களை அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், ராம பக்தர்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பூட்டு (400 கிலோ எடை கொண்டது) மற்றும் 1,265 கிலோ லட்டு பிரசாதம் ஆகியவை அயோத்தி வந்தடைந்தது. இவை கோயில் நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் என்ற நிறுவனம் 1,265 கிலோ எடையில் லட்டுவை தயாரித்துள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி கூறுகையில், எனது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் கடவுள் ஆசி வழங்கி உள்ளார். நான் உயிருடன் இருக்கும் வரை தினமும் 1 கிலோ லட்டு தயாரிக்க வேண்டும் என உறுதி ஏற்றுள்ளேன். அயோத்தி ராமர் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட லட்டுவிற்கு உணவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளேன். ஒரு மாதம் ஆனாலும் கெடாது. 3 நாட்களில் 25 பேர் 1,265 கிலோ லட்டுவை தயாரித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.உலகின் மிகப்பெரிய பூட்டை, உ.பி., மாநிலம் அலிகார்க்கை சேர்ந்த முதிய தம்பதி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் ருக்மினி சர்மா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்தனர். சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி கோயிலுக்கு வழங்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதனை நிறைவேற்றும் வகையில், இந்த பூட்டுக்கு பூஜை செய்த பிறகு வாகனம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 400 கிலோ எடை கொண்ட இந்த பூட்டு, கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதனைப் பார்க்க அப்பகுதியினர் ஏராளமானோர் கூடினர். வாகனத்தில் பூட்டு ஏற்றப்பட்ட உடன் ‛ஜெய் ஸ்ரீராம்' என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

g.s,rajan
ஜன 20, 2024 23:28

Please Eradicate Un Employment and Poverty from India and all Should Co ordinate with the Government,that is the Need of the Hour.


Seshan Thirumaliruncholai
ஜன 20, 2024 22:32

ஒவ்வொரு நபரின் இருதயத்திருள் உள்ள கட்டை விரல் அளவு குடிகொண்டுஇருக்கும் இறைவனை அன்பு என்ற பூட்டினால் பூட்டி கருணை என்ற சாவியினால் திறக்கவேண்டும்.


JAISANKAR
ஜன 20, 2024 21:20

தன்னை காத்து கொள்ள முடியாத கடவுளுக்கு பூட்டு


Ramesh Sargam
ஜன 20, 2024 23:55

அப்படியல்ல, பக்தர்கள் ராமருக்கு ஏதோ செய்யவேண்டும் என்று எண்ணி இப்படி ஏதாவது ஒரு பொருளை கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். அந்த பூட்டு தினம் பயன்படாவிட்டாலும், ஒரு பக்தர் கொடுத்தார் என்று அங்கு காட்சி பொருளாக வைக்கப்படும். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், அந்த பூட்டிலும் இருப்பார். கும்பிட்டுவிட்டு பிரசாதம் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு செல்லவும். குதர்க்கமாக கருத்து பதிவிடவேண்டாம்.


நரேந்திர பாரதி
ஜன 21, 2024 04:19

வெளியூர் போகும்போது, ஜெய்சங்கர் அவர்களின் வீட்டை திறந்து போட்டுட்டு ஊருக்கு கிளம்பிடுவார், அப்படித்தானே?


அப்புசாமி
ஜன 20, 2024 15:45

இதை வெச்சு எதைப்.பூட்டப்.போறீங்க?


Ramesh Sargam
ஜன 21, 2024 06:30

உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை.


தத்வமசி
ஜன 20, 2024 14:46

ஆர்வமுள்ள அன்பர்களுக்கு வாழ்த்துக்கள். கோவிலே இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள் பூட்டினை தயாரித்துள்ளார் இந்த பக்தர். என்ன நேர்ந்தாலோ ?


Kannan rajagopalan
ஜன 20, 2024 14:30

திருப்பதி போன ஒருத்தர் உண்டி மீது பார்வை செலுத்தி அது பற்றி பேசினார் . அது தான் இப்போ பாதுகாப்பா இந்த பூட்டு ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை