உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்? சம்பய் சோரன் ராஜினாமா

ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்? சம்பய் சோரன் ராஜினாமா

ராஞ்சி: பண மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போதைய முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். சில மாதங்களுக்கு பிறகு, ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார்.https://www.youtube.com/embed/1ss3-k-U00sஇந்நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் சம்பய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இண்டியா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சம்பாய் சோரன் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கவரனர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்தார். முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.

அதிருப்தி

முன்னதாக, சம்பய் சோரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் வகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிர்வாக தலைவர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 21:02

சட்டத்தை விளக்கி தீர்ப்பளிக்க வேண்டிய கோர்ட் சட்டத்தை சந்தி சிரிக்க வைக்கலாமா? ஹேமந்த் தந்தை சிபுவே பார்லிமெண்டில் வாக்களிக்க காங்கிரசிடம் லஞ்சப்பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டவர். அயோக்கிய குடும்பம் செழிக்க கோர்ட்டின் மென்மையான போக்கு முக்கிய காரணம்.


sankaranarayanan
ஜூலை 03, 2024 20:39

ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கபோகிறார் என்று கேட்கவே மனது வேதனை படுகிறது இந்தியாவில் இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் ஜாமீன் என்ற போர்வையில் வெளியே வந்து திரும்பவும் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஒரே நாடு உலகத்தில் இந்தியா ஒன்றுதான்பிறகு நீதிமன்றம் செல்லவே வேண்டாமே


தத்வமசி
ஜூலை 03, 2024 19:33

இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது. நீதிமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 03, 2024 18:54

ஜாமினில் தானே வெளியே வந்து உள்ளார். குற்றமற்றவர் என்று விடுவிக்க படவில்லையே. குற்றம் செய்தவர் என்று தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றனர், நீதிமன்ற உத்தரவையே நீதிபதிகள் மதிப்பில்லையா? முன்பு பொன்முடி, இன்று சோரன், நாளை செந்தில் பாலாஜி? வெட்கக்கேடு.


sankar
ஜூலை 03, 2024 18:06

தேசத்துக்கே அவமானம் இது


Easwar Kamal
ஜூலை 03, 2024 17:47

ஆச்சரியமா இருக்கே? இவளவு நாள் எப்படி விட்டு வச்சாங்க இந்த ரெட்டைகுழல் துப்பாக்கி கூட்டம்.


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2024 17:25

உலகம் பூரா இந்த மாதிரி கேடுகெட்ட சட்டம் இருக்கவே இருக்காது. கைதி இப்போது முதன் மந்திரி????


கூமூட்டை
ஜூலை 03, 2024 17:33

இது தான் மக்கள் மாடல்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ