| ADDED : மார் 28, 2025 04:12 AM
ஹெப்பால்: பெங்களூரு, ஹெப்பாலை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமண இணையதளம் மூலம் ஜீவன்குமார், 27 என்பவரின் அறிமுகம் சில மாதங்களுக்கு முன் கிடைத்தது. இருவரும் மொபைல் போனில் பேசினர். தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்று இளம்பெண்ணிடம் கூறினார். இருவரும் நேரில் சந்தித்த போது நெருக்கமாக இருந்தனர். இதனை ஜீவன்குமார் புகைப்படம், வீடியோ எடுத்து கொண்டார்.'எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறி, இளம்பெண்ணிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாய் ஜீவன்குமார் வாங்கினார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்தார். இளம்பெண் பணம் கொடுக்க மறுத்ததால், ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டினார்.பயந்து போன இளம்பெண், ஜீவன்குமார் மீது ஹெப்பால் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரிக்கின்றனர்.