உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர் அடித்துக் கொலை

இளைஞர் அடித்துக் கொலை

புதுடில்லி:திலக் நகரில் இளைஞரை அடித்துக் கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.திலக் நகரில் வசித்தவர் பிந்து,40. நேற்று முன் தினம் இரவு 9:45 மணிக்கு, பிந்துவுடன் அதே பகுதியில் வசிக்கும் இருவர் வாக்குவாதம் செய்தனர். இருவரும் சேர்ந்து பிந்துவை சரமாரியாகத் தாக்கினர்.மயங்கி விழுந்த பிந்து தீன்தயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பிந்துவை தாக்கிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை