உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுவ பிரிகேட் தலைவருக்கு கலபுரகியில் நுழைய தடை

யுவ பிரிகேட் தலைவருக்கு கலபுரகியில் நுழைய தடை

பெங்களூரு: நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற, யுவ பிரிகேட் தலைவர் சக்ரவர்த்தி சூலிபெலேவை, கலபுரகியில் நுழைய தடை விதித்ததால், பா.ஜ., அதிருப்தி தெரிவித்துள்ளது.கலபுரகி, சித்தாபுரவில் 'நமோ பாரத்' நிகழ்ச்சி, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாபுராவ் திருமண மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பத்து ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை விவரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்கும் நோக்கில், யுவ பிரிகேட் தலைவர் சக்ரவர்த்தி சூலிபெலே, பீதரின், பால்கியில் இருந்து கலபுரகிக்கு புறப்பட்டார். ஆனால் கமலாபுராவின், கின்னி சடக் அருகில், நேற்று முன் தினம் நள்ளிரவு, போலீசார் தடுத்து நிறுத்தினர். கலபுரகியில் நுழைய விதித்துள்ளதாக கூறி, திருப்பி அனுப்பினர். இதை பா.ஜ,, கண்டித்துள்ளது.இது தொடர்பாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கூறியதாவது:காங்கிரஸ் அரசு, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என, கோஷமிடும் தேச துரோகிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. மற்றொரு பக்கம் தேச பக்தர்களின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இது வெட்கக்கேடான விஷயமாகும்.நமோ பிரிகேட் மூலமாக, தேசப்பற்று ஏற்படுத்தும் சிந்தனையாளர், எழுத்தாளர் சக்ரவர்த்தி சூலிபெலேவுக்கு, கலபுரகியில் நுழைய தடை விதித்து, உள்ளாட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை.காங்கிரஸ் அரசின் இத்தகைய செயலை, வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நாட்டுக்கு அவசர சூழ்நிலையை திணித்த காங்கிரஸ், கர்நாடகாவில் மீண்டும் அதை நினைவூட்ட முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.சக்ரவர்த்தி சூலிபெலே கூறியதாவது:என்னை கண்டால், அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு பயம். எனவே என்னை கலபுரகியில் நுழைய விடாமல், தடை விதித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், பத்து ஆண்டு சாதனைகள் குறித்து, 50 இடங்களில் நிகழ்ச்சி நடத்தினேன். பீதரின், பால்கியில் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சித்தாபுராவுக்கு செல்லும் போது தடுத்தனர்.என் நிகழ்ச்சி சித்தாபுராவில் நடக்க கூடாது என்ற காரணத்தால், நிகழ்ச்சியை தாசில்தார் ரத்து செய்ய வைத்தார். இரவு 11:00 மணிக்கு என்னை தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து நான் நீதிமன்றத்தில் முறையிடுவேன். சித்தாபுராவில் பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை