டிராவல் ஏஜென்ட் சவால்களும் வாய்ப்புகளும்
பயணம் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவர் டிராவல் ஏஜென்ட்தான். ஒரு டிராவல் ஏஜென்ட்டின் பணி கவர்ச்சிகரமானதாகவும் அதே சமயம் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. சில சமயங்களில் பிரச்னைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. ஒரு டிராவல் ஏஜென்டின் பணியில் தடைக்கற்கள் அதிகம் தென்படும் அவற்றையெல்லாம் எதிர்கொள்வது எப்படி என்பதை எத்தனை பயிற்சி கொடுத்தாலும் முழுமையாக விளக்கிவிட முடியாது. ஏனென்றால் பிரச்னைகள் முற்றிலும் புதியதாக இருப்பதுடன், எதிர்பாராத வண்ணமும் வந்துவிடும். உதாரணமாக பனிப்பொழிவு காரணமாக ஒரு டிராவல் ஏஜென்டின் காரில் ஒரு வாடிக்கையாளர் மாட்டிக்கொள்ளும்போதோ, அல்லது ஒரு பாலைவனப் பயணத்தின் நடுவில் கார் பழுதடையும் போதோ, அந்த டிராவல் ஏஜென்டின் நிலை மிகவும் அவதிக்கு உட்படும்விதத்தில் இருக்கும். என்ன தேவை? வெற்றிகரமான டிராவல் ஏஜென்டாக பணிபுரிய முதல் அத்தியாவசியத் வையாக இருப்பது சிக்கல்களைக் கையாளும் திறமைதான். தமது வாடிக்கையாளரின் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்து அல்லது அசவுகரியங்களை அமைதியாகவும், நல்ல முறையில் திட்டமிட்டும் எதிர் கொள்ளும் தன்மை தேவைப்படுகிறது. எனவே பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு டிராவல் ஏஜென்ட் மாற்றுத்திட்டங்களை வைத்திருப்பது முக்கியத் தேவையாக இருக்கிறது.பொதுவாகவே, சேவைத்துறை சார்ந்த அம்சங்கள் என்பவை நாம் உணர்ந்து மட்டுமே அறியப்படும் தன்மை கொண்டவை. பொருட்களைப் போன்று அவற்றை தொட்டு உணரமுடியாது. டிராவல் ஏஜென்டின் வெற்றி என்பது அவரது வாடிக்கையாளரின் திருப்தி தொடர்புடைய பணி என்பதால் இதுவும் இத்தகைய தன்மையைச் சேர்ந்ததே. எனவே இப்பணிகளில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் பெறுவதைவிட விமர்சனங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விமர்சனங்களைத் தாங்கும் மனநிலையே இரண்டாவது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.அடிப்படையில் டிராவல் ஏஜென்ட் பணியும் விற்பனைத் தன்மை கொண்டுள்ளது. இதற்கு நல்ல தகவல் பரிமாற்றம் திறன் மற்ற நல்ல உறவுகளும் கட்டாயம் தேவைப்படுகிறது. நல்ல வாடிக்கையாளர் உறவுகள் ஒரு டிராவல் ஏஜென்டின் வெற்றிக்கு அடித்தளம் வகுக்கின்றன. இதனால்தான் நல்ல வாடிக்கையாளருக்கு ஒரு டிராவல் ஏஜென்ட் சில சிறப்பு விருந்துகளை அவரின் பயணத்தின் ஏதாவது ஒரு பிரிவில் தருகிறார்.ஒரு சிறந்த டிராவல் ஏஜென்ட் இலகுத்தன்மை, அடக்கம், பெருந்தன்மை, நாகரீகம், எப்பொழுதும் திருப்திப்படுத்தும் தீராத தாகம் ஆகிய அம்சங்களை கொண்டவராக இருக்கவேண்டும்.சுற்றுலாத் தலங்களில் அன்றாடம் ஏற்பட்டு வரும் மாற்றம், முன்னேற்றங்கள் குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். சுற்றுலாத்துறை சந்தையின் நாடித்துடிப்பை அறிந்து கொள்வது, அதற்கேற்ற உத்திகளையும், மாற்றங்களையும் உடனுக்குடன் அமல்படுத்துவது ஒரு டிராவல் ஏஜென்டின் பணியை மேம்படுத்தும். ஒரு சுற்றுலா மையத்தைப் பற்றி இணையதளங்களில் குறிப்பிடப்படாத அம்சங்களை அறிய சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வும் ஒரு டிராவல் ஏஜென்டுக்குத் தேவைப்படுகிறது.சமீபத்தில் இன்டர்நேஷனல் ஏர் டிராபிக் அசோசியேஷன் டிராவல் ஏஜென்டுகளுக்கு கமிஷன் தருவதில்லை என்று எடுத்த முடிவு இவர்களைப் பெரிதும் பாதித்துள்ளபோதும், இது நல்ல வாடிக்கையாளர்களைப் பெறுவதில் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது என்ற அணுகுமுறையோடு பணிபுரிய வேண்டியுள்ளது. ஊதியம் எப்படி? டிராவல் ஏஜென்சி படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு முதலில் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியமாகக் கிடைக்கும். இவர்கள் டூர் அசிஸ்டென்ட், டூர் மேனேஜர் போன்ற பணிகளைப் பெறலாம். நாமாகவே துவங்கும் டிராவல் ஏஜென்சியில், நமது திறமை, அணுகுமுறை, மற்றும் செயல்படும் தன்மையைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும் என்பதால் நமதுஊதியத்திற்கு வரையறைகள் கிடையாது. எவ்வளவு செயல்படுகிறோமோ அதற்கேற்ற ஊதியம் பெறலாம். எங்கு படிக்கலாம்? 1. இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்2. நேதாஜி சுபாஷ் தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்