உள்ளூர் செய்திகள்

கேட் எழுதுபவர்களுக்கு...

அதற்காக விண்ணப்பித்தவர்கள் இறுதிக்கட்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தேர்வுக்கு தயாராகிறவர்கள் முதலாவதாக மனஅழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். திறமை மிக்கவராக இருந்தாலும் பதட்டத்தை தவிர்க்கா விட்டால் சாதிப்பது கடினம். மனஅழுத்தத்தை குறைக்க உங்களுக்குள் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்வை சாதாரண முறையில் அணுக வேண்டும். தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை, இதைப்போன்று வேறு பல சிறந்த நுழைவுத்தேர்வுகள் உள்ளன, என எண்ண வேண்டும். தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே மற்ற முக்கிய வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தேர்வு நெருங்கும் சமயத்தில் புதிய பகுதிகளை படிக்காமல் ஏற்கனவே படித்தவற்றை திருப்பி பார்க்க வேண்டும். இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகரித்திருக்கின்றன. எனவே நகரின் ஒதுக்குப்புறமான இடங்களில் கூட தேர்வு மையங்கள் இருக்கலாம். அதனால் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே தேர்வு மையத்தை நேரில் சென்று பார்த்து, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளவும். ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மறக்காமல் தேர்வுக்கு எடுத்துக் செல்ல வேண்டியவை * 2009 கேட் அட்மிட் கார்டு * கேட் வவுச்சர் * புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை (டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அட்டை, கல்லூரி அடையாள அட்டை, தொழிலாளர் அடையாள அட்டை) * இருப்பிட முகவரி, வயது போன்றவற்றுக்கான சான்றிதழ், கையெழுத்துடன் கூடிய புகைப்படம் * தேவை இருப்பின் ஜாதிச்சான்றிதழ் தேர்வு அறையில் அனுமதிக்கப்படாதவை: * கைக்கடிகாரம் * பேனா * மொபைல் போன் * கால்குலேட்டர் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 3.30 முதல் 6 மணி வரையும் தேர்வு நடைபெறுகிறது. கண்டிப்பாக இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை * தேர்வு ஆரம்பித்த பிறகு முடியும் வரை வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். * வினாத்தாள் உட்பட தேர்வு அறையில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. * நாற்காலி, மேஜை சரியில்லை என்றால் தேர்வு துவங்குவதற்கு முன் கண்காணிப்பாளரிடம் கூறி மாற்றிக் கொள்ளலாம். தேர்வு துவங்கிய பிறகு மாற்ற முடியாது. * சரியான நேரத்தில் தேர்வை முடிக்க வேண்டும். கூடுதல் நேரம் தரப்பட மாட்டாது. நேரத்தை முன்னால் இருக்கும் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். * அடித்தல், திருத்தல் இல்லாமல் விடைத்தாள் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !