மாணவர்களுக்கு போட்டித்தேர்வு வழிகாட்டுதல் மிகவும் அவசியம்
அரசு போட்டித்தேர்வுகளை பொறுத்தவரையில், வாய்ப்புகள் பல உள்ளன. டி.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., எம்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், தமிழ்நாடு சீருடை பணி, விமானப்படை, ராணுவம், அறநிலையத்துறை, வனத்துறை என பல பிரிவுகளில் ஆண்டுதோறும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களும், பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க முடியும். இதுபோன்ற போட்டித்தேர்வுகள் குறித்து, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. கல்லுாரி முதலாமாண்டு முதலே, இதுபோன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பொறுமை அவசியம். வெற்றி பெறுவது எளிது. கல்லுாரி முதலாமாண்டு முதல் செய்தித்தாள் வாசித்தல், ஆங்கிலப்புலமை மேம்படுத்துதல், இத்தேர்வுக்கான பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். பயிற்சியை முறையாக மேற்கொண்டால் , கல்லுாரி முடித்து வெளிவரும் போது நல்ல அரசு பணியுடன் அதிகாரத்தில் அமர முடியும். -கருணாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கோவை