‘ஜினோமிக்ஸ்’
மருத்துவப் படிப்புகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. ஆனால், ஆர்வம் உள்ள அனைவருக்கும் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை! இவர்களுக்கான மாற்றுப் படிப்புகளில் ஒன்றுதான், மருத்துவத்துக்கு இணையான உயிரியல் துறை படிப்பான ‘ஜினோமிக்ஸ்’. அறிவியல் ஆராய்ச்சி துறையில் புதுமை படைக்க விரும்புபவர்களுக்கு இப்படிப்பு உறுதுணையாக இருக்கும். எதைப் பற்றிய படிப்பு?சுவாரஸ்சியமான தேடலை தூண்டும் அறிவியல் பாடப்பிரிவில் மரபணு, மரபியல் பொருள், மனிதன் அல்லது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் போன்ற பிற உயிரினங்களின் டி.என்.ஏ.,-களை பற்றி படிப்பது தான் ஜினோமிக்ஸ். உயிரினத்தில் எவ்வாறு டி.என்.ஏ.,கள் செயல்படுகின்றன மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றால் போல் எப்படி சில மரபணுக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பினை கொண்டுள்ளது, என்பது பற்றி அடிப்படையில் புரிவதற்கு ‘ஜினோமிக்ஸ்’ அறிவியல் படிப்பு இன்றியமையாததாக உள்ளது. சுற்றுச்சூழலின் காரணிகள் மற்றும் நடத்தைகள் மூலம் தான் மனிதர்கள் அல்லது பிற உயிரினங்களுக்கு நோய் தொற்று ஏற்படுகின்றதா? எதனால் குறிப்பிட்ட உயிரினங்களுக்கு மட்டும் சில தொற்றுகள் பரவுகின்றது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ‘ஜினோமிக்ஸ்’ மூலம் எளிதில் விடை காணலாம். தகுதிகள்மேல்நிலை வகுப்புகளில் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றை முதன்மை பாடங்களாக பயின்று, இளநிலை பட்டப் படிப்பில் தாவரவியல், விலங்கியில், நுண்ணுயிரியில், உயிர்வேதியியல், மரபியல், பயோடெக்னாலஜி அல்லது அதற்குச் சமமான இயற்பியல், வேதியியல், மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் வேளாண்மை போன்ற லைப் சயின்ஸ் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.டெக்.,- பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோ இன்பர்மேடிக்ஸ் படித்த மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருந்தால் அவர்கள் எம்.எஸ்சி., ஜினோமிக்ஸ் படிப்பிற்கு தகுதியானவர்கள். நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது செமினார் பிரசன்டேசன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். முக்கிய கல்வி நிறுவனங்கள்குருஷேத்ரா பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சி.எஸ்.ஐ.ஆர்.,-இன்ஸ்டிடியூட் ஆப் ஜினோமிக்ஸ் அன்ட் இன்டெகரேட்டிவ் பயோலஜி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸ். வாய்ப்புகள்: இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு, உடல்நலத் துறை, மேம்பாட்டு நிறுவனங்கள், மரபணு பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி சார்ந்த தொழில்நிறுவனங்கள், மரபணு சிகிச்சை துறை, டி.என்.ஏ., தடய அறிவியல் துறை, மருந்து தயாரித்தல் துறை, வேளாண் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற பல அறிவியல் துறைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.