உள்ளூர் செய்திகள்

சிறந்த ‘பரிந்துரைக் கடிதம்’ தயாரிக்க வேண்டுமா?

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று பரிந்துரைக் கடிதம்... பரிந்துரைக் கடிதம் என்பது, உங்களைப் பற்றியும், உங்களது திறன் பற்றியும், மற்றொருவர் நேர்மறையாக எழுதுதல். எனவே, அதை எழுத, புகழ்பெற்ற மனிதர்களை தேடிச்செல்வதை விட, உங்களால் கவரப்பட்ட மனிதர்களை தேடிச் செல்வதே சிறந்தது! சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல்உங்களுக்காக உங்களைப் பற்றி கடிதம் எழுதுபவர், உங்களுக்கு பல ஆண்டுகள் அறிமுகம் உள்ளவராகவும், நீங்கள் விண்ணப்பிக்கும் துறையில் தகுதி வாய்ந்தவராகவும் இருத்தல் நலம். பரிந்துரை கடிதம் எழுதும் பணிக்கு, உங்களின் கல்லூரிப் பருவத்தில், உங்களுக்கு நன்கு அறிமுகமான, உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த ஒரு நல்ல பேராசிரியர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார். பரிந்துரைத்து கடிதம் எழுத அவரிடம் கோரிக்கை விடுகையில், நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதற்கான தெளிவான காரணங்களை, அவர் அறிவது அவசியம்! கலந்துரையாடுங்கள்கடைசி நேரத்தில் சென்று விஷயங்களைக் கூறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தெளிவாக எடுத்துக்கூறி, அவருடன் அமர்ந்து நிதானமாக கலந்துரையாடுங்கள். இதன்மூலம், அவரைப் பற்றியும் நீங்கள் அறிந்து, அவர் பொருத்தமானவரா என்பதையும் முடிவு செய்ய முடியும். கலந்துரையாடலின்போது, தெளிவாகப் பேசி, உங்களின் பலம் சார்ந்த அம்சங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும். ஒரு குறிப்பிட்ட படிப்பை மேற்கொள்ள நீங்கள் தகுதியானவர்தான் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். கால அவகாசம்பரிந்துரைக் கடிதம் எழுதுவதென்பது, சிறிது காலம் பிடிக்கக்கூடிய ஒரு முக்கிய செயல் என்பதால், கடிதம் எழுதுபவருக்கு, குறைந்தபட்சம் 4 வாரங்களாவது தரப்பட வேண்டும். கடிதத்திற்கான குறிப்பிட்ட தேதிக்கு, சராசரியாக 10 நாட்கள் முன்னதாக, கடிதம் எழுதுபவருக்கு நினைவூட்டலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், கடிதத்தைப் படிக்க தருமாறு கேட்கக்கூடாது! பொதுவாக, பரிந்துரைக் கடிதங்கள் என்பவை, ஒருவர் ஒரு குறிப்பிட்ட படிப்பில் அல்லது பணிக்கு தகுதியுடையவர் என்ற சான்றளிப்பது... அதேசமயம், சான்றளிப்பவர், ஒருவரின் தகுதி மற்றும் திறமை குறித்து போதுமான திருப்தியடையவில்லை எனில், அவர் பரிந்துரைக் கடிதத்தை எழுதாமலிருத்தல் நலம்! ஒருவர், உங்களுக்காக பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் உங்களுக்கு உதவுகிறார் என்று அர்த்தம். எனவே, அந்தப் பணியை முடிக்க, நீங்கள், முடிந்தளவிற்கு அவருக்கு உதவ வேண்டும். உங்களது தகுதிகள் மற்றும் திறமைகள்  குறித்த விபரங்களை அதாவது, உங்களின் படிப்பு, அனுபவம் மற்றும் இதர திறன்கள் அடங்கிய ஒரு அறிக்கையை அவருக்குத் தரலாம். பரிந்துரைக் கடிதம் உங்களைப் பற்றிய முக்கிய தகவல்கள், சிறந்த உரைநடையில் நல்ல சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். மறைமுகமான மொழி நடையைப் பயன்படுத்தக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக மற்றும் நேரடியாக சொல்ல வேண்டும். இல்லையெனில், உண்மையான நோக்கத்தை அந்தக் கடிதம் நிறைவேற்றாது. அளவீடுகள்: ஒரு முழு பக்க அளவில் இருத்தல் வேண்டும். தொடக்கம், உள்ளடக்கம், நிறைவு ஆகிய 3 பகுதிகளைக் கொண்டிருக்கும். தொடக்கம்: பரிந்துரைக் கடிதம் எழுதுபவர், தனக்கும், சம்பந்தப்பட்ட மாணவருக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்குவதோடு, கடிதம் எழுதும் காரணத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். (உதாரணம் - கடிதம் எழுதுபவரிடம், சம்பந்தப்பட்ட மாணவர், ஏதேனும் ஆய்வில் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பான சிறப்பான அனுபவத்தை எழுதலாம்). உள்ளடக்கம்:* மாணவர் பற்றிய முக்கிய மற்றும் அவசியமான தகவல்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட வேண்டும்.* தொடர்புடைய மாணவனின், மனோரீதியான சமநிலைத் தன்மை, தன்னம்பிக்கை, சார்புத்தன்மை, பொறுமை மற்றும் படைப்புத்திறன் உள்ளிட்ட தகவல்கள்.* பாடம் தொடர்பான அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், மாணவர்களை நிர்வகிக்கும் சாமர்த்தியம், உடனிருப்பவர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து செயல்படும் திறன், பாடத்திட்ட மேம்பாடு உள்ளிட்ட தகவல்கள்.* மாணவரது அதிகபட்ச ஆர்வம் அல்லது சிறப்பான தகவல்தொடர்புத் திறன். ஆராய்ச்சி திட்டங்கள் போன்றவற்றில் மாணவரின் அனுபவம் மற்றும் திறமைகள். நிறைவு: முந்தைய பகுதிகளில் எழுதிய விஷயங்களை, இப்பகுதியில் சுருக்கமாக கோர்க்கலாம். அவை மாணவன், எதனால் அந்த படிப்பிற்கு தகுதியானவர் என்பதை தெளிவாக தெரிவித்தல் சிறந்தது.  இதில் தேவையற்ற அலங்காரம் மற்றும் வர்ணனைகள் தவிர்ப்பதே உத்தமம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !