இந்தியாவும் அதிக ‘நோபல்’ வெல்லும்!
அறிவியல் துறையில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாகவே இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதிக ஆராய்ச்சியளர்களைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது! அறிவியல் ஆராய்ச்சிகளில் ஒருமித்த குறிக்கோள்களைக் கொண்டிருப்பதும், புவி அமைப்பில் ஒரே பகுதியில் அமைந்திருப்பதும், இருநாடுகளுடனான உறவுக்கு மேலும் வலுவூட்டுகிறது. இருநாடுகளும் ஒன்றுடன் மற்றொன்று பகிர்ந்துகொண்டு செயலாற்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. வாவியல் ஆராய்ச்சியில் நான் இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் மிகவும் இணக்கமாக செயல்பட்டுவருகிறேன். உயர்கல்விக்காக, அதிமான மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகின்றனர். குறிப்பாக, ஆராய்ச்சி படிப்புகளை படிக்க ஆஸ்திரேலியாவை இந்திய மாணவர்கள் தேர்வு செய்வது வரவேற்கத்தக்கது. தங்களது ஆராய்ச்சி படிப்பிற்கு பிறகு, மாணவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு சென்று திறம்பட செயலாற்றுகின்றனர். அத்தகைய மாணவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம். சிறந்த வரலாற்றையும், ஆற்றல்மிகு ஆராய்ச்சியாளர்களையும் பெற்றுள்ள இந்தியா, சமீப ஆண்டுகளாக நோபல் பரிசு பெறவில்லைதான். பொதுவாகவே, ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிகளவிலான நிதியை ஆராய்ச்சியில் முதலீடு செய்கின்றன. அதேசமயம், அரசாங்கம் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதும் அவசியம். முழு ஒத்துழைப்புடன் அதிகமான ஆராய்ச்சிகளில் ஈடுபடும்போது, அதிக சாதனைகளையும் நிகழ்த்த முடியும். அதுபோன்ற சூழலில், இந்தியர்களும் அதிக நோபல் பரிசை வெல்வார்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி பணிகளும் இணைந்து செயலாற்றப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவை இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்களது சாதக, பாதங்களை சரியாக கண்டறிந்து செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியா அவ்வாறு தான் செயல்படுகிறது. அமெரிக்கர்கள் எப்போதுமே சிறந்தவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அமெரிக்க மக்களிடம் கேட்டீர்கள் என்றால், ‘இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும்’ என்றுதான் பதில் அளிப்பார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களைவிட மிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை! பல்கலைக்கழகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த திறன்களுடன் கல்வி நிறுவனத்தைவிட்டு வெளிவர வேண்டும். அனைத்து நிலைகளிலும், நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட வேண்டும். அதற்கேட்ப, தொழில்நுட்பத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பதில் தெளிவு வேண்டும். எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது உணரப்பட வேண்டும். கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அளிக்கப்படும் ஊக்கமும், முதலீடும், அதைவிட பன்மடங்கு முன்னேற்றத்தை அந்நாட்டிற்கே திரும்ப அளிக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்! அதேசமயம், அத்தகைய முதலீடு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றையடைய வேண்டும். ஒருகுறிப்பிட்ட சிலருக்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக நாட்டின் அனைத்துதரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். ஒட்டுமொத்தத்தில், உலகளவில் போட்டியிடும் அளவிற்கு அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்! -பேராசிரியர் பிரைன் பி. சிங்மிட், 2011ம் ஆண்டில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வென்றவர் மற்றும் ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி துணைவேந்தர்.