இந்தியாவில் கல்விச் செலவு குறைவா?
சமீபத்திய ஓர் ஆய்வின்படி, பள்ளிக் கல்வி மற்றும் இளநிலை பட்டப்படிப்பிற்காக (கல்விக்கட்டணம், புத்தகம், போக்குவரத்து என அனைத்தும் சேர்த்து), ஒரு இந்திய பெற்றோர் சராசரியாக ஒரு மாணவருக்கு செலவிடும் தொகை, 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (18,909 அமெரிக்க டாலர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, 15 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம்! முதல் 5 இடம் பெற்ற நாடுகளை பார்ப்போமா? ஹாங்காங்- 85 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் (1,32,161 அமெரிக்க டாலர்)அரபு நாடுகள் - 64 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் (99,378 அமெரிக்க டாலர்)சிங்கப்பூர் - 45 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் (70,939 அமெரிக்க டாலர்)அமெரிக்கா - 37 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் (58,464 அமெரிக்க டாலர்)தைவான் - 36 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் (56,424 அமெரிக்க டாலர்) உலக சராசரி - 28 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் (44,221 அமெரிக்க டாலர்) குறிப்பு: ஒரு அமெரிக்க டாலருக்கான மதிப்பு 64.82 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தங்களது குழந்தைகளின் படிப்பிற்கான செலவினை, 89 சதவீத இந்திய பெற்றோர்கள் ஏற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!