உள்ளூர் செய்திகள்

வாழ்நாளை நீட்டிக்க வழி!

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி, இதய நோய்களை குறைத்து, வாழ்நாளை நீட்டிக்க செய்கிறது! இந்தியாவில் 24 ஆயிரம் பேர் உட்பட, உலகம் முழுவதும் 17 நாடுகளில் 1.3 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் தான் இன்று அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இது சர்வதேச அளவில் பொருளாதார வீக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. 70 சதவீத இதய நோய் உயிரிழப்புகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் மிக்க நாடுகளில் நிகழ்கிறது, என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 18 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள் குறைந்தது, வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் இரண்டு நாட்களாவது, சதை வலிமைக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்விலும், ‘தினமும் 30 நிமிட உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர், அதாவது 23 சதவீதம் பேர் தேவையான உடற்பயிற்சிகளை செய்வதில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !