உள்ளூர் செய்திகள்

வகுப்பறையில் ‘ஸ்மார்ட்போன்’ சரியா?

வகுப்பறைகளில் மாணவர்களை ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த அனுமதித்தால், அவர்களது கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும், என ஒரு ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது! ‘ஸ்மார்ட்போன்கள், நமது வாழ்க்கையையே எளிமையாகிவிட்டதாக உணரும் அதே தருணம், நமது புத்தி கூர்மையை அவை மழுங்கடித்து வருவதை நாம் உணர்வதில்லை’ என தென் ஆப்ரிக்காவில் உள்ள ஸ்டெலன்போஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், யூடியுப், பேஸ்புக் போன்றவற்றின் உதவியுடன் பாடம் நடத்தும் நிலையில், இத்தகைய ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.   எனினும், பேராசிரியர்களை கவனிக்காமல், அடிக்கடி சோசியல் மீடியாக்களில், நண்பர்களுடன் கலந்துரையாடும் மாணவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !