உள்ளூர் செய்திகள்

இணையம் வரமா? சாபமா?

அமெரிக்காவில்  வசிக்கும் என் மகளை சந்திக்க சென்றிருந்த போது முப்பது நிமிட பயணத்தில் எந்த ஒரு சாலை சுங்கவரி சாவடியிலும்,  மற்ற எந்த இடத்திலும், எந்தத் தாமதமும் இல்லாமல் எங்களால் செல்ல முடிந்தது  என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது மட்டும் இல்லை, மற்றொரு ஆச்சர்யமும் தொடர்ந்தது. அப்பொழுது வெளி வெப்ப நிலை 12  டிகிரியாக இருந்தது. உடனே என் மகள் காரில் இருந்தபடியே தன் ஐ-போனின்  மூலம் வீட்டின் வெப்பநிலையை 24 டிகிரி (இந்திய வெப்பநிலையாக) மாற்றினாள். இதுவே நான் ஐ.ஒ.டி தொழில்நுட்பத்தை நுகர்வோர் பயன்பாட்டில் கண்ட முதல் அனுபவம். ஐ.ஒ.டிஇன் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் முறை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் வீட்டுப் பணிகளுக்காக அதை உபயோகிப்பதை நான் பார்த்தது இதுவே முதல் முறை. இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஒ.டி) என்பது, நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சாதனங்களை சென்சார், மென்பொருள், இணையதளம்  போன்ற தொழில்நுட்பத்தால் இணைத்து நமது அன்றாட பயன்பாட்டை தகவல்களாகப் பரிமாறி கொள்ளும் ஒரு இணையம் என்று விக்கிப்பீடியா விவரிக்கிறது. 2013 ஆம் ஆண்டு, தகவல் உலகத்தின் உள் கட்டமைப்பாக ஐ.ஒ.டி விளங்குகிறது என்று Global Standards Initiative on Internet of Things (IoT-GSI) விளக்குகிறது. இது நிஜ உலகத்தைக் கணினி உலகத்தோடு நேரடியாக இணைக்கும் வாய்ப்புகளையும், பயன்பாட்டுத் திறனையும், நுண்மையையும், பொருளாதார மேன்மையையும் மேன்மேலும் உயர்த்தும். சட்ட வல்லுநர்களின் பார்வையில் இது வன்பொருள், மென்பொருள், தகவல் மற்றும் சேவைகளின் இன்றியமையா தலைமையாக காணப்படுகிறது. இந்தச் சாதனங்கள் பல்வேறு தரவுத் தளங்களின் உதவியுடன் பயனுள்ள மிக முக்கியமான தகவல்களை சேகரிப்பது மட்டுமல்லாமல், அதை எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் மற்ற சாதனங்களுடன் பகிரவும் செய்கிறது. தற்போதைய சந்தை எடுத்துக்காட்டுகளாக  ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் அமைப்புகள் மற்றும் தானியங்கி துணிதுவைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கூறலாம், இவை தொலைநிலை தொடர்புக்கு Wi-Fiஐ பயன்படுத்துகின்றன. பிரிட்டிஷ் தொழிலதிபர் கெவின் அஸ்டனை(Kevin Aston) ஐ.ஒ.டிஇன் தந்தை எனக் கூறலாம், ஏனெனில் இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஐ.ஒ.டி என்று பெயரிட்டவர் அவரே. 1999ஆம் ஆண்டு ஆடொ-ஐடியில் வேலை செய்து கொண்டிருந்த கெவின், பின்னர், பெல்கின்வெமோ என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் ஐ.ஒ.டி சார்ந்த ஸ்மார்ட் ஹோம் தொழிற்நுட்பத்தைத் தயாரித்து வந்தது. விமோ செயலி மூலம் ஒருவர் தன் வீட்டில் உள்ள அணைத்து மின்னணு இயந்திரங்களையும் சேர்த்து இயக்கமுடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். இதனால் விமோ செயலியை அவரால் விற்க முடிந்தது. ஐ.ஒ.டி என்பது இவற்றை எல்லாம் தாண்டி, பல சிக்கலான வேலைகளையும் செய்ய கூடியது. இதனால் மருத்துவமனை, தொழிற்சாலைகள், அரசாங்கம் உட்படப் பல சவால்கள் நிறைந்த துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதனால்  ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும், அதே நேரத்தில் செலவுகளை குறைக்கவும் முடியும்.  சொல்லப் போனால், வியாபாரத்தை மேற்கொள்ளும் வழிமுறைகளையே அது மாற்றியமைக்கலாம். இண்டர்நெட் ஆப் திங்ஸ்  வரமா? சாபமா? ஐ.ஒ.டிஇன் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் இதற்கு எதிர்மாறாக வாதம் வந்துள்ளது. இது தொழில் முறைகளை மாற்றி அமைத்தாலும், மக்களின் தனி உரிமையைப் பறிப்பதாக அமைகிறது என்ற வாதங்கள் வளர்ந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில், கார்ட்னர் அறிக்கை 2020ஆம் ஆண்டுக்குள் முக்கிய புதிய வணிக செயல்முறைகளில் மற்றும் அமைப்புகளில் பாதியாவது ஐ.ஒ.டிஇன் சில கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறுகிறது. இதன் பாதிப்பு நுகர்வோர் வாழ்க்கையிலும் தொழில்களின் வளர்ச்சியிலும் மிகுந்த வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அதேசமயம், ஐ.ஒ.டி தரவுத் தளங்களின் இணைப்புக்கான செலவுகளும் குறைந்து கொண்டே வருகிறது. "முன்னர் நடைமுறைப் படுத்த சாத்தியமற்று இருந்த ஐ.ஒ.டியின் சில பயன்கள் நடைமுறைக்கேற்ற வகையில் மாற்றப்படும் சாத்தியங்கள் அதிகரிக்கும்" என்று கார்ட்னரின் துணைத் தலைவர் ராய் ஷூல்டே கூறினார். "ஐ.ஒ.டொ எல்லாத் துறைகளின் பயன்பாட்டிற்கும் பொருத்தமானதாக இருக்கும் என்றும், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அம்சங்களின் பயன்பாட்டில் ஐ.ஒ.டிஇன் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும்" இவ்வாறு கூறினார். தொழில்களுக்கு மட்டும் இல்லாமல், கல்வி நிறுவனங்களுக்கும் இந்தச் சாதனங்கள் பயனுள்ளதாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக ரேட்லெக்ஸின் ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பசுமை வளாகமாக மட்டும் இல்லாமல், இணையத் தொடர்புள்ள வளாகமாகவும் மாறுவதற்கு ஐ.ஒ.டி முக்கிய காரணமாக இருக்கின்றது. நாம் ஒரு தொழில்நுட்ப புரட்சியின் மத்தியில் உள்ளோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஐ.ஒ.டி அன்றாட வாழ்வில் மட்டும் இல்லாமல், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் முறையையே மாற்றக் கூடிய வலிமை பொருந்தியாக இருக்கின்றது. ஐடாக்டர்செயலி, ஐ.ஒ.டிஇன் இன்னொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இது ஆப் (App) தொழில்நுட்பம் மூலம் நமது இதயத் துடிப்பு , ரத்த அழுத்தம், ECG  போன்ற  தகவல்களை நமது மருத்துவரிடம் நேரடியாகப் பகிர்கிறது. இதன் மூலம், மருத்துவர் நம்மைச் சந்திக்காமலே நம்மைப் பரிசோதித்து மருத்துவம் பார்க்க முடியும். இந்தத் தகவல்களை நமது செல்போனில் நம்மால் கூட பார்க்கமுடியும். ஐ.ஒ.டி நமது நிஜ உலகத்திற்கும் டிஜிட்டல் உலகிற்கும் இருந்த இடைவெளியைப் பெரிதும் குறுக்கிவிட்டது. ஆயினும் நமது வாழ்விலும் தொழில்களிலும்  இதன் முழு செயல் திறமையை நம்மால் முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. மெஷின் லேர்னிங் எனப்படும் முறையைக் கொண்டு கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் நம்மை ஐ.ஒ.டிஇன் பயன்பாட்டில் பெரிதும் இணைத்துவிட்டது. இவ்வாறு நடக்கும் தகவல் பரிமாற்றங்களில் பெரிதும் கவனம் கொள்வோம் என்றும் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என ஆப்பிள் நிறுவனர் டிம் குக் கூறி இருந்தாலும், மற்ற நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டால் இவர்களுக்கும் இந்தத் தகவல்களை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றார். விரைவில் நாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் மூக்குக் கண்ணாடி நம்மைப் பற்றியும் நமது சுற்றத்தை பற்றியும் பெரிதும் தெரிந்து வைத்திருக்கும். அதேநேரம் மருத்துவம், சொந்த பாதுகாப்பு போன்ற பல இன்றியமையாத அம்சங்களையும் இது கொண்டுவரும். இதே போல், குளுக்கோஸ் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற உயிரியல் தகவலை மனிதர்களிடமிருந்து நேரடியாகப் பதிவு செய்து சென்சார்கள், வியாதிகள் வருவதற்கு முன்பே நம்மை எச்சரிக்கக் கூடும். இதனால் இது (ஐ.ஒ.டி) சுகாதாரம், காப்பீடு, மற்றும் மன நிலை ஆகிய துறைகளில் சிறந்த அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது எல்லாம் நம்மை மீண்டும் அதே கேள்விக்கு கொண்டு செல்கிறது – ஐட்டம் ஆப் திங்ஸ் (ஐ.ஒ.டி) வரமா ? சாபமா?   தி.நா.ஸ்வாமி நாதன்க்ரேட்லெக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !