உள்ளூர் செய்திகள்

சவால்களுக்கு தீர்வு காண்கிறோம்

இன்று, பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி செய்யவே விரும்புகின்றனர். அதற்குகேட்ப, கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையே தேர்வும் செய்கின்றனர். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதில் ஆர்வம் வெகுவாக குறைந்துவருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.இத்தகைய சூழலில், எந்த ஒரு பொறியியல் படிப்பும், தொழில்நிறுவனங்களின் தேவை அறிந்து, அதற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், ஐ.ஓ.டி., எம்படெட் சிஸ்டம் போன்ற தொழில்நுட்பங்கள் உலகையே ஆளுகின்றன.  இவை போன்ற தொழில்நுட்பங்கள், அனைத்து துறைகளுடனும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், பொறியியல் துறையை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும். எங்கள் கல்வி நிறுவனத்தில், இத்தகைய தொழில்நுட்பங்களை அனைத்து துறை பாடங்களிலும் இணைத்து வழங்க முழு முயற்சி மேற்கொண்டுள்ளோம். பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று, 1986ல் ஒரு தொழில்நுட்ப கல்லூரியாக துவக்கப்பட்ட காரூண்யா கல்வி நிறுவனம், 2004ல் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றது. தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள, இத்தகைய அந்தஸ்து பெரிதும் துணைபுரிகிறது. சிறப்புகள்வளாக நேர்காணலுக்காக வரும் தொழில் நிறுவன அதிகாரிகளிடம், எங்கள் கல்வி நிறுவன மாணவர்களின் சிறப்புகள் குறித்து கேட்கும்போது, ’காரூண்யா மாணவர்கள் குழுவாக இணைந்து பணியாற்றும் பண்பு கொண்டவர்கள் என்றும், மிகவும் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்கின்றனர்’, என்றும் கூறுகின்றனர். இத்தகைய நற்சான்று எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவ படிப்பில், எப்படி மருத்துவமனைகளில் பாதி நேரத்தை மாணவர்கள் செலவு விடுகிறார்களோ, அதேபோல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளிலும், மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். கரும்பலகை, இணையதளம் சார்ந்த கல்வி மட்டும் போதாது. ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து ஒவ்வொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இவற்றையே எங்கள் கல்வி நிறுவனத்தில் நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், மனிதர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு சரியான தீர்வு காண்பதே காரூண்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது. உணவு, நீர், சுகாதாரம், ஆற்றல் ஆகிய நான்கு அம்சங்களுக்காக வரும் காலத்தில் மனித குலமே தவிக்க போகிறது என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த நான்கு அம்சங்களிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியத்துவம் அளிக்கிறோம். இஸ்ரேலின் ஆறு பல்கலைக்கழகங்களுடனும், அமெரிக்கா, கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களுடனும், இந்தியாவில் உள்ள முன்னணி ஆய்வுக்கூடகங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளோம். எதிர்காலத்தில், தொழில்நிறுவனங்களில் பாதி நாட்களை செலவிடும் பேராசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் நியமனம் செய்யப்படும் நிலை நாடு முழுவதும் வரும். அதனை பின்பற்றும் முயற்சியை இப்போதே நாங்கள் துவக்கிவிட்டோம்! -பால் தினகரன், வேந்தர், காரூண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !