உள்ளூர் செய்திகள்

செவெனிங் ஸ்காலர்ஷிப்

செவெனிங் ஸ்காலர்ஷிப் என்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் சர்வதேச உதவித்தொகை திட்டமாகும். வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகம் மற்றும் இதர அமைப்புகளால் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. படிப்புயு.கே., கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பகுதிநேர படிப்பு, தொலைநிலைக் கல்வி, 9 மாதங்களுக்கு குறைவான கால அளவு கொண்ட படிப்புகள், 12 மாதங்களுக்கு அதிகமான கால அளவு கொண்ட படிப்புகள், பிஎச்.டி., டி.பில், ஆகிய படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.உதவித்தொகை விபரம்:பல்கலைக்கழக கல்விக்கட்டணம்மாத உதவித்தொகையு.கே., சென்று வருவதற்கான பயண செலவுவிசா கட்டணம்தங்குமிட செலவு செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.தகுதிகள்:* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.* யு.கே.,வில் படித்து பட்டம்பெற்ற பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும். * யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும். * உரிய ஆங்கில மொழிப் புலமையையும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பிக்க விரும்பும் படிப்புகளுக்கு உரிய கல்வித்தகுதிகள், பணி அனுபவம் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை பெற்றவர்கள் தேவையான விபரங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.chevening.org/scholarship/india


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !