உள்ளூர் செய்திகள்

பாரின்சிக் படிப்புகள்

மத்திய உள்துறை அமைச்சத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படும் நேஷனல் பாரின்சிக் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தடவியல் நிபுணர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பல்வேறு குற்றச் சம்பங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கிலும் என்.எப்.எஸ்.யு., கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. வளாகங்கள்: காந்திநகர், டெல்லி, கோவா மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் இக்கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன.வழங்கப்படும் படிப்புகள்:பி.எஸ்சி.,-எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ் - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புஎம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., டிஜிட்டல் பாரின்சிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., சைபர் செக்யூரிட்டி - 2 ஆண்டுகள்பி.ஜி.டிப்ளமா இன் பாரின்சிக் நர்சிங் பி.ஜி.டிப்ளமா இன் ஹுமானிட்டேரியன் பாரின்சிக்ஸ்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுஎம்.ஏ., போலிஸ் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். விண்ணப்பிக்கும் முறை: https://gfsuadm.gipl.in/frmwelcome.aspx எனும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, பிரிண்ட் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பித்துடன் உரிய ஆவணங்களையும் இணைத்து பல்கலைக்கழகத்திற்கு அஞ்சல் வாயிலாகவும் அணுப்ப வேண்டும்.விபரங்களுக்கு: www.nfsu.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !