உள்ளூர் செய்திகள்

பாராமெடிக்கல் படிப்புகள்

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.படிப்புகள்:பி.பார்ம்.,பி.பி.டி.,பி.ஏஎஸ்எல்பி.,பி.எஸ்சி., - நர்சிங்பி.எஸ்சி., - ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜிபி.எஸ்சி., - ரேடியோ தெரபி டெக்னாலஜிபி.எஸ்சி., - கார்டியோபல்மொனரி பர்பூசன் டெக்னாலஜிபி.எஸ்சி., - மெடிக்கல் லேப்ரட்டரி டெக்னாலஜிபி.எஸ்சி., - ஆப்ரேஷன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜிபி.எஸ்சி., - கார்டியாக் டெக்னாலஜிபி.எஸ்சி., - கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜிபி.எஸ்சி., - டயாலிஸ் டெக்னாலஜிபி.எஸ்சி., - பிசிஷியன் அசிஸ்டெண்ட்பி.எஸ்சி., - அக்சிடெண்ட் மற்றும் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜிபி.எஸ்சி., - ரெஸ்பிரேட்டரி தெரபிபேச்சுலர் ஆப் ஆப்தமொலஜிபி.ஓ.டி., பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி டெக்னாலஜிபி.எஸ்சி., - கிளினிக்கல் நியூட்ரிசன்தகுதிகள்:* இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை பிறப்பிடமாகவும் கொண்டிருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பிறப்பிடமாக கோர முடியாது. * தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். * டிசம்பர் 31, 2021ம் தேதியின் படி 17 வயதை நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். சில படிப்புகளுக்கு உச்ச வயது வரம்பு மாறுபடும்.* 12ம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்திட்டம் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணித பாடத்துடன் வேறு பாடங்களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/ மற்றும் https://tnhealth.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !