பி.என்.ஒய்.எஸ்., படிப்பு
யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் இதன்மூலம் சேர்க்கை பெறலாம்.படிப்பு காலம்: ஓர் ஆண்டு இடர்ன்ஷிப் பயிற்சியுடன் 5 1/2 ஆண்டுகள்.கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பி.சி., / பி.சி., முஸ்லீம் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண், எம்.பி.சி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 35 சதவீத மதிப்பெண், மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.இடஒதுக்கீடு: முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்று திறனாளிகள், யூனியன் பிரதேசங்கள் அல்லது பி.என்.ஒய்.எஸ்., கற்பிக்கும் இல்லாத கல்லூரிகளை சேர்ந்த மாநில மாணவர்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு பிரிவு அடிப்படையில் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கல்லூரிகள்: தமிழகத்தில் செயல்படும் 2 அரசு கல்லூரிகள் மற்றும் 17 தனியார் கல்லூரிகள்.கல்விக் கட்டணம்: தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.விண்ணப்பிக்கும் முறை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhealth.tn.gov.in/ வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துடன் செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ சமர்பிக்கலாம்.விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/