உள்ளூர் செய்திகள்

பேஷன் படிப்புகள்

கடந்த 1986ம் ஆண்டு நிறுவப்பட்ட 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’, பேஷன் கல்வியை வழங்குவதில் நாட்டின் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. நாடு முழுவதும் பல வளாகங்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், ஜவுளி மற்றும் ஆடை துறைக்கு, தொழில்முறை மனித வளத்தை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. ஆடை வடிவமைப்பு கலையில், புதுமைகளை முன்னெடுக்கவும், வணிக ரீதியான வளர்ச்சி மற்றும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி வளாகங்கள்: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, காந்திநகர் ஆகிய இடங்களில் இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புகள்:* பி.டெஸ்., - பேச்சுலர் ஆப் டிசைன் பிரிவுகள்: பேஷன் டிசைன், லெதர் டிசைன், ஆக்சசெரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன்.* பி.எப்.டெக்., - பேச்சுலர் ஆப் டெக்னாலஜி  பிரிவு: - அப்பேரல் புரொடக்‌சன் படிப்பு காலம்: 4 ஆண்டுகள்முதுநிலை பட்டப்படிப்புகள்:எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன் எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட் எம்.எப்.டெக்., - மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜிபடிப்பு காலம்: 2 ஆண்டுகள்ஆராய்ச்சி படிப்பு: பிஎச்.டி.,தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் 3 அல்லது 4 ஆண்டு டிப்ளமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பிற்கு பொதுவாக ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். எம்.எப்.டெக்., படிப்பில் சேர, பி.எப்.டெக்., அல்லது பி.இ., அல்லது பி.டெக்., படித்திருக்க வேண்டும்.சேர்க்கை முறை:இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ‘ஜென்ரல் எபிலிட்டி டெஸ்ட்’- ஜி.ஏ.டி., தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு: www.nift.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !