உள்ளூர் செய்திகள்

தாய்லாந்தில் படிக்க உதவித்தொகை

தாய்லாந்தில் பொருளாதாரம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, தாய்லாந்தில் உள்ள சுலாலாங்கொர்ன் பல்கலைக்கழகம் உதவித்தொகை வழங்குகிறது. சுலாலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் 2022ம் கல்வி ஆண்டில் இரண்டு நிலைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை காலம்: 4 ஆண்டுகள் வரையிலான 8 செமஸ்டர்கள் அல்லது 3 கோடைகால அமர்வுகள் உதவித்தொகை விபரம்: செமஸ்டருக்கு 1.8 லட்சம் ரூபாயும், கோடைகால அமர்வுக்கு 90 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். முக்கிய நிபந்தனைகள்:உதவித்தொகை காலம் நீட்டிக்கப்படாது. மாணவர்கள் குறைந்தபட்சம் ஒட்டுமொத்த ஜி.பி.ஏ.எக்ஸ்., கல்வித்திறன் 3.50க்கு குறையாமல் இருக்க வேண்டும். தகுதிகள்:குறிப்பிட்ட கல்வித்திறனுடன், குறைந்தபட்சம் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில மொழிப்புலமை தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர, ஏதேனும் ஒரு கணிதப் புலமை தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: http://www.eba.econ.chula.ac.th/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். 1,500 தாய்லாந்து பாட் பண மதிப்பிலான தொகையை விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக்கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்பட மாட்டாது.தேர்வு செய்யப்படும் முறை: மாணவர்களின் கல்வி செயல்திறன் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விபரங்களுக்கு: இமெயில்: eba.admission@chula.ac.thஇணையதளம்: https://www.education.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !