இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப்
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அறிமுகம்: 1976ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உதவித்தொகை திட்டத்தில் சுமார் 76 லட்சம் ரூபாய் வரையில் தகுதியும், திறமையும் உள்ள இந்திய மாணவர்கள் பெறலாம்.கல்வி நிறுவனங்கள்: இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் மற்றும் சயின்சஸ் போ - பாரிஸ் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., துறைகள்: பிசினஸ் மற்றும் பினான்ஸ்கம்ப்யூட்டர் சயின்ஸ்இன்ஜினியரிங்பேஷன் டிசிஅன்பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டூரிசம்இந்தியன் ஸ்டடீஸ்மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்மெடிசின், டென்டிஸ்ட்ரி மற்றும் அவை சார்ந்த தெரபி படிப்புகள்மியூசிக் பப்ளிக் ஹெல்த், ஆகிய துறை படிப்புகளை தவிர இதர படிப்புகள்.உதவித்தொகை: கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.விண்ண்ப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்த நபர்களுக்கு முதல்கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களில் இருந்து இறுதிகட்ட நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விபரங்களுக்கு: www.inlaksfoundation.org