உள்ளூர் செய்திகள்

சட்ட படிப்பில் டூயல் டிகிரி

எந்த விஷயத்தை பற்றியும் பரந்த அறிவை வளர்த்துக் கொள்வது, பிறரை விட முன்னணியில் இருக்க உதவும். தற்போது மாணவர்களும், பெற்றோரும் முன்னணி சட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடுகின்றனர். வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளமே இதற்கு காரணம். தற்போது பல்வேறு பல்கலைக்கழகங்கள் சட்ட படிப்பில் டூயல் டிகிரியை அறிமுகம் செய்துள்ளன. துறைக்கு ஏற்றவாறு செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களால், சட்டப்படிப்பு மேலும் கவர்ச்சிகரமானதாகியுள்ளது. இதன் மூலமாக மேஜரில் ஒரு பாடமாக சட்டமும், மற்றொரு பாடமாக பிசினஸ் மேனேஜ்மென்ட் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜியையும் எடுத்து படிக்க முடியும். உலகமயமாக்கத்தால் சர்வதேச அளவில், தொழில், வர்த்தக சிக்கல்கள் உருவாகின்றன. பி.பி.ஏ., எல்.எல்.பி., படிப்பதன் மூலமாக இரண்டு துறைகளை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக வழக்கமான சட்டப்படிப்பை நிறைவு செய்பவர்களை விட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும். வழக்கமான சட்டபடிப்புகளை நிறைவு செய்யும் மாணவர்கள் வணிக நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற முடியாது. ஆனால் டூயல் டிகிரி நிறைவு செய்யும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எளிது. இந்த படிப்பில் சட்ட பாடத்தை தவிர நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, விற்பனை விதிமுறைகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களும் இடம் பெறும். ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., டெக்னாலஜியுடனோ, பி.பி.எஸ்சி.,யுடனோ எல்.எல்.பி., படிப்பை நிறைவு செய்ய முடியும். பி.எஸ்சி., யுடன் படிப்பதன் மூலமாக அறிவுசார் சொத்துரிமை குறித்த தொழில்நுட்ப சட்ட வல்லுனராக முடியும். பி.பி.எஸ்சி.,யுடன் சேர்ந்து எல்.எல்.பி., நிறைவு செய்தால் பொது கொள்கை தொடர்பான வல்லுனராக முடியும். இதில் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், பொலிட்டிக்கல் சயின்ஸ், சோஷியாலஜி, சைக்காலஜி உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறும். இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பெரும்பாலான கல்லூரிகள் நுழைவுத்தேர்வை நடத்துகின்றன. இந்த படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்