உள்ளூர் செய்திகள்

புதுவை பல்கலையில் நிதி உதவியுடன் பிஎச்.டி.,

புதுச்சேரி பல்கலைக்கழக தொடர்பியல் துறை மற்றும் மின் ஊடக ஆய்வு மையத்தில் 12 மாணவர்களுக்கு மாத உதவித் தொகையுடன் பிஎச்.டி., படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவலை பல்கலையின் கலாச்சாரம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் துறை இயக்குனர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், பிஎச்.டி., சேர்க்கை அறிவிப்பு மற்றும் நுழைவுத் தேர்வு விபரங்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 28ம் தேதி விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள். இத்துறை 2007ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இங்கு எம்.ஏ., தொடர்பியல் மற்றும் எம்.எஸ்சி., மின் ஊடகப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. படிப்பை முடிக்கும் மாணவர்கள், "டிவி' ரேடியோ, பத்திரிகை மற்றும் இன்டர்நெட் இதழ்களில் வேலை பெறும் வாய்ப்பை பெறுகின்றனர். லேப் ஜர்னல், வீடியோ புல்லட்டின், "டிவி' ஸ்டுடியோ, மல்டிமீடியா லேபரேட்டரி ஆகியன மாணவர்கள் பயிற்சி பெற உதவியாக உள்ளன. படிக்கும் காலத்தில், மாணவர்கள் டாகுமென்டரி படம் தயாரிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள். துறை விரிவாக்கம் பற்றி இயக்குனர் தெரிவித்த போது, "இத்துறைக்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டடப் பணிகள் துவங்க உள்ளன. இக்கட்டடத்தில் ஸ்டுடியோ, ஆடியோ, வீடியோ ஆய்வுக்கூட வசதிகள் இடம்பெறும். தென் மாநிலங்களில் மிகச்சிறந்த வசதிகளைக் கொண்ட துறையாக இத்துறை வளர்ந்து வருகிறது. பிஎச்.டி., பயிலும் மாணவர்கள் தங்களுக்கான ஆய்வுநெறியாளரை, பல்கலையின் விதிமுறைகளின் படி, கல்வி நிறுவனத்திலிருந்தோ, தொழிற்கூடங்களிலிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்' என்றார். பல்கலைக்கழக மானியக்குழுவின் எலக்ட்ரானிக் மல்டி மீடியா ரிசர்ச் சென்டர் (இ.எம்.எம்.ஆர்.சி.,), "டிவி' சேனல்கள் மற்றும் பிற தொடர்பியல் துறைகளுடன் இணைந்து இத்துறை பணியாற்றி வருகிறது. துறையில் மிகச்சிறந்த வீடியோ காமிரா வசதி, லைட்டிங், கேரக்டர் ஜெனரேட்டர், காமிரா கன்ட்ரோல் யூனிட், டெலிப்பிராம்ட்டர், ஆடியோ மிக்சர் மற்றும் ரிக்கார்டர் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மல்டிமீடியா லேபரேட்டரியில் புதிய சாப்ட்வேர் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள எப்.எம்., ரேடியோ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. ஆடியோ, வீடியோ ஆவணக் காப்பகமும் துறை மாணவர்களுக்கு உதவியாக உள்ளன. மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணைய தளம்: www.pondiuni.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !