வளர்ச்சிப் பாதையில் சாப்ட்வேர் துறை
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் இந்திய ஐ.டி., துறைநிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக புதிய வேலைவாய்ப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது சாப்ட்வேர், ரீடெய்ல், ஹெல்த்கேர் மற்றும் டெலிகாம் போன்ற துறைகள் மீண்டும் வேலைவாய்ப்பு மிக்க துறைகளாக முன்னேறி வருகிறது. 2010 2011ம் நிதிநிலை ஆண்டில், இத்துறைகள் புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, பொருளாதார அளவில் பெரும் வளர்ச்சியை எட்டும் என்று டி.சி.எஸ்., ஐதராபாத் மண்டல துணைத் தலைவர் ராஜன்னா, தகவல் தெரிவித்துள்ளார். அதே போல வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளும் இந்த நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு மிக்க துறைகளாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.