உள்ளூர் செய்திகள்

டிவி திரைப்பட துறையில் நாட்டின் முதல் பட்டப்படிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நாட்டின் டிவி திரைப்படத் துறைக்கான முதல் பட்டப்படிப்பு தரும் கல்வி நிறுவனம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் கோவிந்த் நிகலானி இதை தொடங்கி வைத்தார். தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படத் துறை மற்றும் மீடியாவின் வளர்ச்சி இன்று பிரமிக்கத்தக்கதாக உள்ளது. எனவே இது போன்ற சிறப்புக் கல்வி நிறுவனங்கள் இன்று அவசியமாகியுள்ளது. இயக்கம், ஸ்கிரிப்ட் ரைட்டிங், சினிமாட்டோகிராபி, புரடக்ஷன் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் சிறப்புப் படிப்புகளைக் கொண்ட, "டிவி' திரைப்படத் துறையின் முதல் பட்டப்படிப்பை இந்த நிறுவனம் தரவுள்ளது. City Pulse Institute of Film and Television (CPIFT) என இது அழைக்கப்படவுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !