உள்ளூர் செய்திகள்

கங்கை நதி

இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி மற்றும் வற்றாத நதி என புகழப்படும் கங்கை நதி தற்போது படிப்படியாக  மாசடைந்து வருகிறது. இதனையடுத்து கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டம் ஒன்றை மத்திய அரசு துவக்கி உள்ளது. இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு, 18 மாதங்களில் தூய்மைப்படுத்தும் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் இந்தியாவிலுள்ள ஏழு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை 6ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஏழு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் தலைவர்கள் ஆகியோருக்கு  இடையே கையெழுத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !