உள்ளூர் செய்திகள்

மாற்றம் வருமா!

மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகும். கல்வி கற்க செல்லும் மாணவர்களின் மூளையில் எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு திணித்து அனுப்புவது கல்விச் சாலைகளின் வேலையல்ல மாறாக மாணவர்களை சிறந்த ஒழுக்கநெறி படைத்தவர்களாகவும், பழக்க வழக்கங்களில் மேம்பட்டவர்களாகவும், நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களாகவும், தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் ஆக்கப்பட வேண்டியதே கல்வியின் நோக்கமாகும். எனவே மாணவர்களை புத்தக பொதியை சுமக்கும் கழுதைகளாகவும், மனப்பாடம் செய்ததை வாந்தி எடுப்பவர்களாகவும் ஆக்கிவரும் "மெக்காலே' கல்விமுறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பாடதிட்டத்தில் இடம்பெற வேண்டும்.சாலை விதிமுறைகள், இந்திய அடிப்படை சட்டங்கள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவைகள் கற்றுத்தரப்பட வேண்டும்.நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். "ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களை கொடுங்கள், வளமிக்க இந்தியாவை உருவாக்கி காட்டுகிறேன்''என்று சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !