காந்திய படிப்புகள் படிக்க...
நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தர போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் மகாத்மா காந்தி. இவருடைய வாழ்க்கைப் பதிவுகள் பாடங்களாக பயிற்றுவிக்கப்படுகின்றன. காந்தியடிகள் கடந்து வந்த பாதைகள், அகிம்சை கொள்கைகள், அரசியல் பங்கேற்பு, அயல்நாட்டினரை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், பொருளாதார கோட்பாடு உள்ளிட்டவை பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. பயிலும் நிறுவனங்கள்* சிவாஜி பல்கலைக்கழகம், கோல்காபூர் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன. விவரங்களுக்கு: www.unishivaji.ac.in * ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர் காந்திய சிந்தனைகளில் எம்.பில்., படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: www.uniraj.ac.in * மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால் இங்கு காந்திய படிப்புகளில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு: www.manipal.edu * பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் இக்கல்வி நிறுவனத்தில் காந்திய சிந்தனைகளில் எம்.ஏ., மற்றும் எம்.பில்., படிப்புகள் உள்ளன. விவரங்களுக்கு: www.gandhianstudies.puchd.ac.in * மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கோட்டயம் இக்கல்வி நிறுவனத்தில் காந்திய சிந்தனைகளில் எம்.ஏ., மற்றும் எம்.பில்., படிப்புகள் உள்ளன.விவரங்களுக்கு: www.mguniversity.edu