பங்குச்சந்தையில் சாதிக்க...
கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், என்.எஸ்.இ.,(நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) உடன் இணைந்து பங்குச்சந்தை தொடர்பான பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கப்படுகிறது. ஐதராபாத், மும்பை, டில்லி, சென்னை, பெங்களூரு, புனே, மங்களூரு மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை தகவல்கள், சந்தேகங்கள்,முதலீடுகள் மற்றும் பங்குகள் பற்றிய தேர்வு உள்ளிட்ட பங்குச்சந்தை தொடர்பான அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் மற்றவர்களை இத்துறையில் சிறந்து விளங்க முடியும். என்.எஸ்.இ., மற்றும் பங்குச்சந்தை சிறந்து விளங்குபவர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்புக்கான கால அளவு 100 மணி நேரம். இதில் 80 மணி நேரம் பாட வகுப்புகளும், 20 மணி நேரம் பிராக்டிகல் வகுப்பாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் மற்றும் பிராக்டிகல் ஆகியவற்றை வெற்றிகரமாக முடிக்கும் முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், மணிபால் பல்கலைக்கழகம் மற்றும் என்.எஸ்.இ., ஆகியவை இணைந்து வழங்குகின்றன.