உள்ளூர் செய்திகள்

கட்டணத்தைத் திருப்பி தராத ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கெதிரான நிறவெறித் தாக்குதல்கள் நடைபெறுவதும் அதனால் சர்ச்சைகள் எழுவதையும் படித்து வருகிறோம். இந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆர்வமும் சற்றே குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்களது படிப்பைத் தொடர விரும்பும் பல இந்திய மாணவர்கள் கட்டியுள்ள விசாகட்டணத்தைத் திரும்பத் தர முடியாது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கூறுவதால் இந்த மாணவர்கள் கடுமையான நிதிச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு தந்துள்ள உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலைதான் பிரிட்டனில் படிக்க விரும்பி விசா மறுக்கப்பட்ட மாணவர்களுக்கும். ஆஸ்திரேலிய கல்விச் சட்டத்தின் படி விசா மறுக்கப்பட்ட 28 நாட்களுக்குள் அந்தக் கட்டணம் மாணவர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். ஆனால் நிதிச் சிக்கலால் மூடப்படும் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் நிதிப் பிரச்னையை சரிக்கட்ட இது போல பிற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !