உள்ளூர் செய்திகள்

ஆங்கில மொழித் தேர்வுகள்

வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்வது நமது எதிர்காலத்தை சிறப்பானதாக்கும். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உயர்கல்வி பயில ஆங்கில மொழி நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம். டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., மற்றும் சாட் ஆகிய ஆங்கில மொழி தேர்வுகள் இதற்கு பயன்படுகின்றன. வெளிநாடு செல்ல தேவையான அடிப்படை நுழைவுத்தேர்வுகள் பற்றி இங்கு காண்போம். டோபல்டோபல் (டி.ஓ.இ.எப்.எல்.,) என்பது, தி டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் அஸ் ஏ பாரின் லாங்குவேஜ் என்பதன் சுருக்கம். இந்த ஆங்கில மொழி நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதின் மூலம் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும். இந்த தேர்வை 130 நாடுகளில் உள்ள 7 ஆயிரத்து 500 கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உயர்கல்வி படிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தேர்வு மதிப்பெண் செல்லும். மதிப்பெண் குறைவாக இருந்தால் தேர்வு முடிவு வெளியான ஏழு நாட்களுக்குள், மீண்டும் தேர்வை எழுதி மதிப்பெண்ணை கூட்டிக் கொள்ளலாம். டோபல் தேர்வு வாசித்தல், கவனித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் என நான்கு கட்டமாக நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் தான், டோபல் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட கட்டணப்படி இந்த தேர்வுக்கு ரூபாய் 2,700 வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் இத்தேர்வை எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.ets.org/toefl ஐ.இ.எல்.டி.எஸ்.,ஐ.இ.எல்.டி.எஸ்., என்பது இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லாங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் என்பதே. இந்த தேர்வை 135 நாடுகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. டோபல் தேர்வை போலவே இதிலும், கவனித்தல், வாசித்தல், எழுதுதல்மற்றும் பேசுதல் ஆகிய நடைமுறைகள் உள்ளன. இந்த தேர்வுக்கு ரூபாய் 7,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்ததேர்வை எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.ielts.org சாட்அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் சாட் (எஸ்.ஏ.டி.,) தேர்வு எழுதுவது அவசியம். இந்த தேர்வு பொதுத்தேர்வு, மொழித்தேர்வு மற்றும் ஒவ்வொரு சிறப்பு பாடத்துக்கும் தேர்வு என தனித்தனியாக நடத்தப்படுகிறது. சாட் பொதுத்தேர்வில் இலக்கணம் மற்றும் கணிதத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. சாட் தேர்வு ஒவ்வொன்றும் மூன்று மணி நேரம் நடக்கும். மொழித்தேர்வில் கட்டுரை எழுதுதல் மூலம் ஆங்கிலத் திறன் சோதிக்கப்படுகிறது. மேலும்கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுக்கு 4,400 ரூபாயும், மொழித்தேர்வுக்கு 3,300 ரூபாயும், ஒவ்வொரு சிறப்புப் பாடத் தேர்வுக்கு 2,800 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்குwww.collegeboard.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !