உள்ளூர் செய்திகள்

புதிய நர்சிங் படிப்புகள்

சென்னையில் உள்ள அப்பல்லோ காலேஜ் ஆப் நர்சிங் நிறுவனத்தில் புதிய நர்சிங் படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியன் நர்சிங் கவுன்சில் (ஐ.என்.சி.,) அமைப்புடன் இணைந்து இந்த போஸ்ட் டிப்ளமோ நர்சிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய போஸ்ட் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்* கிரிடிகல் கேர் நர்சிங்* எமர்ஜன்சி அண்டு டிஸ்சாஸ்டர் நர்சிங்* கார்டியோ  தோராசிக் நர்சிங்* நியோனடல் நர்சிங்* ஆப்பரேசன் ரூம் நர்சிங்* ஆர்தோபெடிக் நர்சிங்* ஆன்காலஜி நர்சிங்* நியூரோ சயின்ஸ் நர்சிங் இந்த போஸ்ட் டிப்ளமோ நர்சிங் படிப்புகள் ஒரு ஆண்டு கால அளவில் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகள் 400 மணி நேரம் பாடத்திட்டமும், 1500 மணிநேரம் செய்முறை விளக்கமும் கொண்டது. நர்சிங்கில் இளநிலை பட்டம் முடித்தவர்கள் மட்டுமே இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இந்த டிப்ளமோ படிப்பை தேர்வு செய்து படிப்பதன் மூலம், நர்சிங்கில் குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணத்துவம் பெற முடியும். இதனால் ஊதியம் அதிகரித்து, பணிச்சுமை குறையும். மேலும் குறிப்பிட்ட ஒரு துறையில் சிறந்த அனுபவம் பெற முடியும். எனவே நர்சிங்கில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற படிப்பாக இது விளங்குகிறது. மேலும் விபரங்களுக்கு www.apollohospitalseducation.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !