மெடிக்கல் இமேஜிங் படிக்க...
இக்காலத்தில் மருத்துவ முறைகள் பெருமளவு டிஜிட்டல் நுட்பமாக மாற்றம் பெருகின்றன. இவைகளை பயன்படுத்தி நோய்களை முற்றிலுமாக கண்டறிந்து, அவற்றிற்கு தக்க மருத்துவம் அளித்து, குணமாக்குவதே மெடிக்கல் இமேஜிங் துறையின் நோக்கமாகும். இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களை காண்போம். * ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை இப்பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி என்ற இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு srmcehe.org.in * தந்தை முல்லர் மருத்துவக்கல்லூரி, மங்களூரு இக்கல்வி நிறுவனத்தில் 6 மாத உள்ளகப்பயிற்சியுடன் கூடிய மூன்றரை ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு உள்ளது. விவரங்களுக்கு fathermuller.edu.in * புனித ஜான்ஸ் மருத்துவ கல்லூரி, பெங்களூரு இங்கு இளநிலை பட்டப்படிப்பில் மெடிக்கல் இமேஜிங் படிப்பு கற்றுத்தரப்படுகின்றன.விவரங்களுக்கு www.stjohns.in * மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால் இப்பல்கலைக்கழகத்தில் இத்துறைச் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manipal.edu * ஆசிய உடல் நல அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இங்கு இத்துறையின் கீழ் டிப்ளமோ மற்றும் உள்ளகப்பயிற்சியுடன் கூடிய இளநிலை படிப்புகள் உள்ளன. விவரங்களுக்கு www.aiohs.com * எம்.ஜி.எம்.உடல் நல அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இத்துறையில் இளநிலை படிப்பை கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தில் சேர நுழைவுத்தேர்வு அவசியமாகும். விவரங்களுக்கு www.mgmuhs.com