உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிப்பு

தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்புகள் வந்துவிட்டன. இத்தகைய ஒருங்கிணைந்த படிப்புகள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதேபோன்று ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கற்பித்து வருகின்றன. பிளஸ்2 படித்து முடித்த மாணவர்கள் இதில் சேரலாம். பட்டப்படிப்பை முடித்துவிட்டு சேருவதை விட நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகளில் சேர்ந்து படிப்பதே புத்திசாலித்தனம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சில... * லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ* குருசேத்ரா பல்கலைக்கழகம், அரியானா* ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர்* வி.ஐ.டி., பல்கலைக்கழகம், வேலூர்* எம்.எம்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், அரியானா* மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ரோட்டாக்* கே.எஸ்.ஸ்கூல் ஆப் பிசினஸ், ஆமதாபாத்* ராய் பிசினஸ் ஸ்கூல், புதுடில்லி* தேவி அகிலயா விஷ்வவித்யாலயா, இந்தூர்* என்.எம்.ஐ.எம்.எஸ்., மும்பை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !