டயட்டீசியன் படிப்பு
இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் அவசரகதியில் உண்ணுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவினை உண்ணுகின்றனர். தரமற்ற உணவை உட்கொள்வதாலேயே பொதுமக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஆரோக்கியமின்மை பிரச்னைக்கு உள்ளாகின்றனர். இதனால் ஏற்படும் வயிற்று கோளாறுகள், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை களைய உதவுபவர்களே டயட்டீசியன்கள். எந்தெந்த உணவில் எத்தகைய சத்து நிறைந்துள்ளது அதனால் ஏற்படும் நிறை, குறை என உணவின் தன்மை பற்றி முழுமையாக அறிந்திருப்பதோடு மனித உடலின் செயல்பாடுகள் குறித்தும் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். விளையாட்டு வீரர்கள், மாடல் அழகிகள், கலைத்துறையினர், கர்ப்பிணிகள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு டயட்டீசியன்களின் ஆலோசனைகள் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. வேலைவாய்ப்புஇந்த துறையை பொறுத்தளவில் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வசதிபடைத்த செல்வந்தர்கள் ஆகியோர் சொந்தமாக டயட்டீசியன்களை பணி நியனம் செய்து ஆலோசனைகளை பெறுகின்றனர். மருத்துவமனைகளில் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலன்கருதி டயட்டீசியன்களை வேலை நியமனம் செய்ய ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. இதனால் உலகளவில் திறமையான இவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த துறை சார்ந்த முதுநிலை டிப்ளமோ படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் கற்பிக்கின்றன. ஹோம் சயின்சில் இளநிலை அல்லது முதுநிலை படித்தவர்கள் மற்றும் புட் இன்ஜினியரிங்கில் பி.டெக்., எம்.டெக்., முடித்தவர்கள் இந்த துறையில் ஜொலிக்கலாம். கல்வி நிறுவனங்கள்* டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி* ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா* சென்னை பல்கலைக்கழகம், சென்னை* மும்பை பல்கலைக்கழகம், மும்பை* உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன், ஐதராபாத்* குருநானக் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்