உள்ளூர் செய்திகள்

ஜூவல்லரி டிசைன் படிக்க...

விலை உயர்ந்த உலோகங்களான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் அரிய வகை கற்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், பாதுகாத்தலை படிக்கும் துறை "ஜூவல்லரி டிசைன்'. இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள்: * இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்மாலஜி, புதுடில்லி கற்களை அடையாளம் காணுதல் மற்றும் நிறமுடைய கற்கள், ஆகியவற்றை படிக்கும் மூன்று மாத படிப்பு இங்குள்ளது. விவரங்களுக்கு www.iigdelhi.com/ * ஆர்க் அகாடமி ஆப் டிசைன், ஜெய்ப்பூர் இக்கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பும், 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.archedu.org * மணிப்பால் பல்கலை.,, மணிப்பால் பி.பி.ஏ., பிரிவின் கீழ் ஜூவல்லரி டிசைன் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manipal.edu


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !