குவாண்டம் கம்ப்யூட்டிங் பொறியியல்
கணிப்பொறி உலகத்தில் மிகப்பெரிய புரட்சியாக உருவெடுத்து வரும் துறை தான் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' பொறியியல். இது பாரம்பரிய கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் பைனரி முறைமையை விட வேறுபட்டது. இத்துறையில் க்யூபிட் எனப்படும் குவாண்டம் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலான கணக்கீடு நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலமாக கணிப்பொறி செயல்திறன் ஆயிரமடங்கு அதிகரிக்கப்படுகிறது. சிக்கலான விஞ்ஞான மற்றும் தொழில்துறை பிரச்சனைகளை அதிவேகமாக தீர்க்கக்கூடிய திறன் இந்தக் கணிப்பொறிகளுக்கு உள்ளது.படிப்புகள்குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான பொறியியல் படிப்புகள் தற்போது பல முன்னணி கல்வி நிறுவனங்களில் அறிமுகமாகியுள்ளது. இளநிலை பொறியியல் படிப்புகள் குவாண்டம் கம்ப்யூட்டிங் அல்லது குவாண்டம் டெக்னாலஜி என்ற பட்டங்களில் வழங்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் மற்றும் துகள் மாதிரியியல் ஆகியவைகளை ஒருங்கிணைக்கும் பாடங்கள் இடம்பெறுகின்றன. முதுநிலை படிப்புகள், கணிப்பொறி அறிவியல், இயற்பியல் மற்றும் துகள் மாதிரியியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பாடநெறிகளில் கற்பிக்கப்படும் முக்கிய பகுதிகளில், குவாண்டம் ஆல்காரிதம்கள், குவாண்டம் எரர் கரெக்ஷன், குவாண்டம் இன்பர்மேஷன் தியரி, குவாண்டம் மெஷின் லெர்னிங் மற்றும் குவாண்டம் கிரிப்டோகிராபி போன்றவை அடங்கும்.மேலும், குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்த துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளன.வேலை வாய்ப்புகள்ஆராய்ச்சி நிறுவனங்கள், உளவுத்துறை, பாதுகாப்பு அமைப்புகள், வங்கிகள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ளது. குவாண்டம் ஆல்காரிதம் டெவலப்பர், குவாண்டம் மென்பொருள் பொறியாளர், குவாண்டம் ஹார்ட்வேர் இன்ஜினியர், குவாண்டம் நெட்வொர்க் நிபுணர், மற்றும் ரிசர்ச் சயின்டிஸ்ட் போன்ற பதவிகளில் பணியாற்றலாம். குவாண்டம் கிரிப்டோகிராபி, குவாண்டம் மெஷின் லெர்னிங், குவாண்டம் நெட்வொர்கிங் போன்ற சிறப்பு பகுதிகளிலும் தனித்துறைகளாக வேலை வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன.எதிர்கால வளர்ச்சிகுவாண்டம் கம்ப்யூட்டிங் துறை எதிர்காலத்தில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. முக்கியமாக, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மூலக்கூறு மாதிரிமுறையில் குவாண்டம் கணிப்பொறிகள் எதிர்காலத்தை மாற்றக்கூடியதாக கருதப்படுகின்றன.