உள்ளூர் செய்திகள்

சமுதாயம் முன்னேற சிந்தனை துாண்டும் நுால்கள் வேண்டும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கோவை : கோவை நன்னெறிக் கழகம் சார்பில், மரபின்மைந்தன் முத்தையா எழுதிய, பழகிப் பார்த்ததில் இவர்கள் என்ற, நுால் வெளியீட்டு விழா, பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி அரங்கில் நடந்தது.நுாலை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் வெளியிட, கே.பி.ஆர்., குழு நிறுவனங்களின் தலைவர் ராமசாமி பெற்றுக்கொண்டார்.விழாவுக்கு, தலைமை வகித்த உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது:நான் பல முக்கியமான வழக்குகளில், சென்சிட்டிவான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறேன். குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, நியாயமாக கிடைக்க வேண்டிய நீதியை வழங்கி இருக்கிறேன்.அதற்கு முக்கிய காரணம், நான் நல்ல இலக்கிய நுால்களை வாசித்ததுதான். அதனால்தான் எழுத்தாளர்களையும், இலக்கிய பேச்சாளர்களையும் கொண்டாடுகிறேன். ஒரு சமுதாயம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற, மக்களின் சிந்தனையை துாண்டும் எழுத்தாளர்களின் படைப்புகளால் தான் முடியும்.இவ்வாறு, அவர் பேசினார். பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை சந்திக் கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அதில் சிலர் மட்டும், மறக்க முடியாத மனிதர்களாக மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட முக்கிய ஆளுமைகளை பற்றிதான், மரபின்மைந்தன் இந்த நுாலில் பதிவு செய்து இருக்கிறார் என்றார்.பாலரிஷி ஸ்ரீவிஸ்வசிராஷினி அருளுரை வழங்கினார். நுாலாசிரியர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்புரையாற்றினார். விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம், நன்னெறிக்கழக நிர்வாகிகள் டைனமிக் நடராஜன், பத்மநாபன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்