கே.எஸ்.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் தேசிய கைத்தறி தின உலக சாதனை நிகழ்ச்சி
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., மகளிர் கலை அறிவியல் கல்லுா-ரியில், முதுகலை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறை சார்பில், தேசிய கைத்தறி தின உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.இளநிலை இரண்டாமாண்டு ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறை மாணவி மைத்ரேயி வரவேற்றார். நாமக்கல் கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, பத்திரத்துறை பதிவாளர் தர்மலிங்கம் ஆகியோர், கைத்தறி நெசவு சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்பாடு குறித்து பேசினர்.நிகழ்ச்சியில், 100 மாணவியர், கைத்தறி புடவையில், காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை இடைவிடாமல், 12 மணி நேரத்தில், 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தனர்.கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஷேக்முகமது, தென்மண்டல இயக்குனர் ஜென்சிங்ஜோ, வினோதினி, நதியா, மகேஸ்வரி மோகன், சந்தியா கார்த்திகேயன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். அவர்கள், பாராட்டி உலக சாதனை சான்றிதழ் வழங்கினர்.ஒருங்கிணைப்பு செய்த முதுகலை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறை துணை முதல்வரும், துறைத்தலைவருமான மகாலட்சுமி, இளநிலை முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறை தலைவர் இவாஞ்சலின் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.