உள்ளூர் செய்திகள்

சிறுவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி நோய் தாக்கம்; நீராகாரம் பருக டாக்டர்கள் ஆலோசனை

திருப்புவனம் : மாவட்ட அளவில் சிறுவர்களை பொன்னுக்கு வீங்கி எனப்படும் அம்மை நோய் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.பருவ கால மாற்றங்கள் கடந்த சில ஆண்டாக நடக்கிறது. செப்., ல் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை நவ.,ல் பெய்தது. மார்கழியில் பனிப்பொழிவு இருக்க வேண்டிய நிலையில், வெம்பா பனிப்பொழிவு தான் அதிகமாக காணப்படுகிறது. பருவ கால மாற்றங்கள் சிறுவர்களை அதிகமாக தாக்கி வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில மாதமாக சிறுவர்களின் கன்னத்தில் வீக்கமாக காணப்படும், பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றன. மாவட்ட அளவில் ஏராளமான சிறுவர்கள், இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.மம்ப்ஸ் எனப்படும் இந்த அம்மை தாக்கிய பின் 10 நாட்களாக கன்னத்தில் வலி, லேசான காய்ச்சல், தலைவலி ஏற்படும். அதன்பின் கன்னம் வீங்கி வாயை அசைக்கவே முடியாமல் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால், உணவு எடுக்க முடியாமல், நீராகாரமாக தான் எடுக்க முடியும். உமிழ்நீர், தும்மல் மூலம் இந்த வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் என கூறப்படுகிறது.இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பழச்சாறு உட்பட நீராகாரமாக தான் அருந்தவேண்டும். சுத்தமான காற்றோட்டமுள்ள அறையில் தான் ஓய்வு எடுக்க வேண்டும். டாக்டர்களிடம் உரிய சிகிச்சை பெறுவது முக்கியம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்