உள்ளூர் செய்திகள்

கோவை உணவு பதன்செய் பொறியியல் துறை தேசிய அளவில் முதலிடம் பெற்று அசத்தல்

கோவை: அறுவடைக்குப் பிந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அனைத்து இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் (ஏ.ஐ.சி.ஆர்.எப்.,) சிறந்த மையத்துக்கான விருது, கோவை வேளாண் பல்கலையின், உணவு பதன்செய் பொறியியல் துறைக்கு கிடைத்துள்ளது.2024-25ம் ஆண்டுக்கான மிகச் சிறந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அசாம், ஜோர்ஹாட்டில், உள்ள அசாம் வேளாண் பல்கலையில் நடந்த ஏ.ஐ.சி.ஆர்.எப்., 40வது வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில், இவ்விருது வழங்கப்பட்டது.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை பொது இயக்குநர் ஜா விருதை வழங்க, கோவை உணவு பதன்செய் பொறியியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில், அசாம் வேளாண் பல்கலை துணை வேந்தர் பித்யுத் தேகா, லூதியானா மத்திய அறுவடைக்குப் பிந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் நரசய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விருது பெற்றவர்களை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்