உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டட வசதி இல்லாமல் ஆசிரியர், மாணவர்கள் பரிதவிப்பு

கமுதி: கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டட வசதி இல்லாமல், நெருக்கடியான சூழலில் ஆசிரியர், மாணவர்கள் பரிதவிக்கின்றனர். இப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக துடக்கப்பட்டது. முன்பு 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். நிர்வாக சீர்கேட்டால் மாணவர் எண்ணிக்கை குறைந்து 100க்கும் கீழே வந்தது. இந்நிலையில் 2011 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, "இப்பள்ளி மேல்நிலையாக தரம் உயர்த்தப்படும்"என முதல்வர் ஜெ., அறிவித்தார். இது நிறைவேற்றப்படாததால், முதல்வரின் வாக்குறுதி குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. ஒருவழியாக, இப்பள்ளி மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் கல்வி கற்கின்றனர். கட்டடங்கள் சேதமடைந்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி கட்டடங்களை சீரமைக்கவும், வகுப்பறைகள் கட்டுவதற்கும் கல்வித்துறையினர் மனது வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்