உள்ளூர் செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலை. விழா: ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளனர்.கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த 2021 முதல் பாரதிதாசன் பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில், 2024 ஜன.02ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்விழவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவருடன் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இதையடுத்து பிரதமர்-முதல்வர் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்