கொஞ்சம் டீ, கொஞ்சம் பிஸ்கட்! பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
அனைத்து பள்ளிகளிலும், ஆரம்ப வகுப்புகள் மற்றும் மேல் வகுப்புகளில்,ஸ்நாக்ஸ் இடைவேளை விடப்படுகிறது.இந்த இடைவேளையில், பெரும்பாலான குழந்தைகள் கொண்டு வருவது பிஸ்கட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளாகவே உள்ளது.ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆரோக்கியமற்ற உணவுகள் கொண்டு வருவதை தடை செய்து அதை கண்காணிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இதை கண்டுகொள்வதில்லை. பள்ளியை இதில் குறைகூறுவதை காட்டிலும், பெற்றோரே இதில் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதுகுறித்து, ஆசிரியர் உஷா கூறியதாவது:பிஸ்கட், குக்கீஸ், சாக்லேட், கேக், முறுக்கு போன்றவற்றை தான், 80 சதவீத மாணவர்கள் கொண்டு வருகின்றனர். காலையில் எழுந்ததும் டீ, ஹார்லிக்ஸ் போன்றவற்றுடன் பிஸ்கட் உண்ணும் பழக்கத்தை, பெரும்பாலான மாணவர்கள் வைத்துள்ளனர். இது தவறு. ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பெற்றோரின் விழிப்புணர்வு வேதனை அளிக்கிறது.இதையும் படிங்கஅதிக சர்க்கரை, சிந்தடிக் எடிபிள் புட் கலர், மைதா, ரீபண்ட் ஆயில் போன்ற உடம்புக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் பொருட்களையே, இதுபோன்ற உணவுகளில் பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களில், பால், நெய், பாதாம், முந்திரி என கூறுவது முற்றிலும் மார்க்கெட்டிங் யுத்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.சுண்டல், பச்சைப்பயறு, பழங்கள், காரட் போன்றவற்றை ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். என்றாவது ஒரு முறை பிஸ்கட் கொடுக்கலாம். காலையில் எழுந்தவுடன் பிஸ்கட், பள்ளி ஸ்நாக்ஸ் டப்பாவிலும் பிஸ்கட் வைத்து, குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்க்கையை பெற்றோரே கெடுக்க வேண்டாம்.பல நோய்களுக்கு இதுபோன்ற, ஸ்நாக்ஸ் பழக்கமே காரணம். முடிந்தவரை, ஸ்நாக்ஸ் வீடுகளில் செய்தவையாக இருக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.