உள்ளூர் செய்திகள்

வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் தடகள போட்டி

மேட்டூர்: மேட்டூர் செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில், மேட்டூர் வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் தடகள போட்டி, மேட்டூர் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் துவங்கியது. போட்டியை சேலம் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் ராபர்ட் கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். செயின்ட்மேரீஸ் பள்ளி தாளாளர் வில்மாமேரி, பங்குதந்தை அழகுசெல்வன், மேட்டூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ராமச்சந்திரன், திலகம் முன்னிலை வகித்தனர். போட்டியில் மேட்டூர் வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 32 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். நேற்று மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது. இன்று மாணவியர் பங்கேற்கும் தடகள போட்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்