உள்ளூர் செய்திகள்

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஜனாதிபதி: ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னர் அல்ல. ஜனாதிபதி தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக நிர்வாகி திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வை துவக்கத்தில் இருந்தே தி.மு.க., எதிர்த்து வருகிறது. இந்த தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த தேர்வால், ஏழை, எளிய மாணவர்கள் டாக்டராகும் கனவு பறிக்கப்படுகிறது.நீட் தேர்வு வேண்டாம் என்பதே தி.மு.க.,வின் நிலைப்பாடு, தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதிகாரமே இல்லை என்றாலும் மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என்கிறார் கவர்னர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னர் அல்ல. ஜனாதிபதி தான். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்