சாதிக்க வறுமை, ஏழ்மை தடையில்லை: அறிவியல் இயக்க மாநாட்டில் அறிவுரை
கூடலுார்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் கூடலுாரில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார்.அதில், சென்னை சவிதா பல்கலைக்கழக மருந்தியல் துறை தலைவர் மற்றும் விஞ்ஞானி அசோக் குமார் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆற்றலை சேமித்து பயன்படுத்துவது மிக அவசியமாகும். புதிய ஆய்வுகள். தொழில்நுட்பம் மூலம் ஆற்றலை உருவாக்க வேண்டும். கடல்வாழ் பூஞ்சுகள் தற்போது, பல துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு வறுமை, ஏழ்மையால் தடை ஏற்படாது. அது குறித்து கவலைப்படாமல் முயற்சித்து சாதிக்க வேண்டும். படிக்கும் வயதில் லட்சியம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மற்ற பொழுது போக்கும் விஷயங்களில் கவனத்தை சிதற விடக்கூடாது, என்றார்கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன், அறிவியல் இயக்க மாநில செயலாளர் முகமது பாதுஷா, மாநில பொது செயலாளர் சுப்ரமணி, வக்கீல் சுதின்குமார் ஆகியோர் பேசினார். மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் மணிவாசகம், பொருளாளர் கருணாநிதி,பள்ளி நிர்வாகிகள் மாணவர்கள் பங்கேற்றனர்.