சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு
சென்னை: பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில், ஏழு நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது. இன்று(ஏப்ரல் 13) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்று வித்யா பாரதி புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.சனாதனம்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் எனக் குறிப்பிட்டார்.